பஸ் இயக்க வேண்டும்

Update: 2026-06-21 18:33 GMT

அந்தியூர் அருகே உள்ள ஈசப்பறை கிராமத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அதிக அளவில் உள்ளனர். எங்கள் ஊருக்கு ஒரே முறை, மாலை 4 மணிக்கு மட்டுமே அரசு பஸ் வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பஸ் வசதியின்றி தவிக்கிறார்கள். எனவே காலை, மாலை என குறைந்தபட்சம் இருமுறையாவது பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்