பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள தேவஸ்தான விடுதி அருகே பேவர் பிளாக் சாலையில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பாதாள சாக்கடை மூடியை விரைந்து பொருத்த வேண்டும்.