சாலையோரம் ஆக்கிரமிப்பு

Update: 2026-06-21 14:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோர பகுதிகளில் கட்டுமான கழிவுகளை கொட்டி மேடாக்கி தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்