திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்குப் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஸ்கள் வெளியே செல்லும் நுழைவு வாயிலில் ஏற்பட்ட பள்ளத்தைச் சீரமைக்கும் பணி நடந்து முடிந்த பின்னரும், அங்கு வைக்கப்பட்ட பேரிகார்டு இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. இதனால் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் டிரைவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதுடன், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, அங்குள்ள பேரிகார்டை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.