பஸ்களை நீட்டிக்க கோரிக்கை

Update: 2026-06-21 11:30 GMT

திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து கூன்ராக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக காட்டுப்புத்தூர், சின்னப்பள்ளிபாளையம் வழித்தடத்தில் திருராமசமுத்திரம் வரை இயங்கும் பஸ்களையும், ஏழுர்பட்டி வழியாக காட்டுப்புத்தூர் வரை இயக்கப்படும் பஸ்களையும் நெரூர் சதாசிவம் பண்டிதர் கோவில் வரை நீட்டித்து இயக்க வேண்டும். இந்த வழித்தட நீட்டிப்பு பக்தர்களுக்கும், வேலை மற்றும் கல்விக்காக அன்றாடம் பயணிக்கும் கிராமப்புற மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் பஸ் வசதியை மிகவும் எளிதாக்கும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்