பெரம்பலூர் - ஆத்தூர் சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியான மதரசா சாலை சந்திப்பில் தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்தச் சந்திப்பில் விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இரும்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.