இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2026-06-21 14:07 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு 25-க்கும் மேற்பட்ட நகர பஸ்களும், 100-க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்களும் வந்து செல்கின்றன. பர்கூரில் இருந்து திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி, சென்னை செல்லும் கூட்ரோடு உள்ளது. இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பர்கூர் போலீசார் காலதாமதம் இன்றி சாலையில் நிறுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பார்களா?

மேலும் செய்திகள்