ஈத்தாமொழி சந்திப்பில் இருந்து தர்மபுரம், ஆடராவிளை, செட்டிகுளம், வேப்பமூடு, வடசேரி பஸ் நிலையம், பார்வதிபுரம் வழியாக பண்டாரதோப்புக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். இந்த பஸ் தினமும் காலை ஒரு முறை மட்டும் இயக்கப்பட்டு வந்தது. கொரனாவுக்கு பிறகு இந்த பஸ் இயங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி ,கல்லூரி மாணவ -மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
-பிரபக்குமார், ஆடராவிளை.