பார்க்கிங் வசதி கொண்டு வரப்படுமா?

Update: 2026-06-21 14:45 GMT

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வெளியூரில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை தேரடி வீதிகளில் நிறுத்தி செல்கிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே வெளியூரில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு கோவிலில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்