செஞ்சி கூட்டுரோடு வழியாக சென்னை, திருவண்ணாமலை, புதுவை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான வாகங்கள் சென்று வருகின்றன. இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அமைக்கப்பட்ட சிக்னல் பழுதடைந்து பல வருடங்கள் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அங்கு தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த போக்குவரத்து சிக்னலை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.