அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் சென்னை, கும்பகோணம், சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் உலாவுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு செல்வதோடு, உயிர் சேதமும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.