உரிய வழித்தடத்தில் பஸ்கள் செல்லுமா?

Update: 2026-08-16 14:01 GMT

ஆனைக்கட்டி முதல் காந்திபுரம் வரை செல்லும் அரசு பஸ் லாலி ரோடு, காந்திபார்க் வழியாக செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் லாலி ரோட்டில் இருந்து வடகோவை 100 அடி ரோடு வழியாக காந்திபுரம் செல்கிறது. இதுபோன்று காந்திபுரம் முதல் ஆனைக்கட்டி வரை செல்லும் அரசு பஸ் காந்திபார்க், லாலி ரோடு வழியாக செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் 100 அடி ரோடு, வடகோவை, லாலி ரோடு வழியாக ஆனைக்கட்டி செல்கிறது. இதனால் அந்த பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த பஸ்களை உரிய வழித்தடத்தில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்