செஞ்சி- மேல்மலையனூர் செல்லும் சாலையில் கலவாய் கூட்டுரோட்டில் சாலையின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்வதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?