தேவூர் அருகே கத்தேரி ஊராட்சி பகுதியில் உள்ள வளையக்காரனூர், கள்ளிப்பாளையம், மஞ்சுப்பாளையம், கிராமங்களுக்கு சரிவர பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவசர தேவைக்கு மருத்துவமனை செல்லும் பொதுமக்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயணம் செல்ல 4 கி.மீ. நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், தேவூர்.