திருப்பதிக்கு சிறப்பு பஸ்

Update: 2025-10-05 17:48 GMT

தம்மம்பட்டி பஸ் நிலையத்துக்கு தினமும் 110 பஸ்கள் வந்து செல்கின்றன. தம்மம்பட்டியிலிருந்து சென்னை செல்ல காலை, இரவு 2 பஸ்களும், பழனி, பெங்களூரு, கோவைக்கு தலா ஒரு பஸ்சும் செல்கின்றன. தம்மம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோர் சேலம், ஆத்தூர் சென்று அங்கிருந்து திருப்பதிக்கு செல்கின்றனர்.

எனவே தம்மம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து ஒரு சிறப்பு பேருந்து வழித்தடத்தை தோற்றுவித்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூர் வழியாக திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஊர்பொதுமக்கள், தம்மம்பட்டி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி