கோைவ மேட்டுப்பாளையம் சாலையில் வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் வழி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் வீரபாண்டி செல்லும் வாகனங்களும், அங்கிருந்து வரும் வாகனங்களும் நீண்ட தூரம் சுற்றி சென்று வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறது. எரிபொருள் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது. எனவே தடுப்புகளை அகற்றி வழியை திறந்து விட வேண்டும்.