நாமகிரிப்பேட்டை அருகே பட்டணம் முனியம்பாளையம் ஊராட்சி மூலக்காடு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தின் முன்பு பயணிகளுக்கு இடையூறாக அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு அந்த வழியாக பஸ் வருவது தெரியாமல் பரிதவிக்கின்றனர். இதனால் அந்த விளம்பர பதாகைகளை தாண்டி சாலையில் வந்து பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. எனவே வருங்காலத்தில் பயணிகள் நிழற்கூடத்தை மறைத்து விளம்பர பதாகைகள் வைப்பதை தடுப்பதுடன், நிகழ்ச்சி முடிந்து பலநாட்கள் ஆன விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-குமார், பட்டணம் முனியம்பாளையம்.