தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து அம்மாபாளையம், தோழனூர், மெணசி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வரை 10பி என்ற டவுன் பஸ் காலை 8 மணி, மாலை 4 மணி அளவில் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பயனடைந்து வந்தனர். தற்போது அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட 10பி பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-வெங்கடாசலம், பாப்பிரெட்டிப்பட்டி.