பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஜங்ஷன் பெட்டி சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு திரும்பும்போது அந்த ஜங்ஷன் பெட்டி மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த ஜங்ஷன் பெட்டியை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.