கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக தொட்டிபள்ளம் வரை (எண் 68) மதியம் 12 மணி, மாலை 6.45 என 2 நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியூர் செல்வோர் இந்த பஸ்சில் சென்று வந்தனர். தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ்சேவையை தற்போது மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகில், ஆலப்பட்டி.