நிழற்குடை இல்லாததால் அவதி

Update: 2025-08-31 10:03 GMT

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் எல்.எம்.டபிள்யூ பிரிவு, பெரியநாயக்கன்பாளையம், பிரிக்கால், வண்ணாங்கோவில், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு ஆகிய பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் பெரியநாயக்கன்பாளையம் தவிர மற்ற பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லை. இதனால் பஸ்சுக்காக திறந்தவெளியில் காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்