கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில் சாலையோரத்தில் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து லாரிகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றன. எனவே சுங்கச்சாவடி அருகில் சாலையில் இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், கிருஷ்ணகிரி.