ஊத்தங்கரை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் எதுவும் வருவதில்லை. இதனால் பயணிகள் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர். எனவே அனைத்து புறநகர் பஸ்களையும் அண்ணா பஸ் நிலையம் வந்து செல்ல சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்திபன், ஊத்தங்கரை.