விதிகளை மீறும் வாகனங்கள்

Update: 2025-08-10 17:34 GMT

ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஆங்காங்கே விபத்துகள் நடந்ததும், காவல்துறை விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்துகள் நேர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதையன், ஏரியூர்.

மேலும் செய்திகள்