திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காவேரி கரையோரமாக கல்லணைக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலைியன் ஓரத்தில் உள்ள ஒரு சில பழமையான மரங்களின் கிளைகள் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இவை வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும்.