சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மற்ற பகுதியில் இருந்து தேவகோட்டைக்கு அன்றாட வரும் பயணிகள் சிரமமடைகின்றனர். மேலும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும்.