போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும்

Update: 2026-07-26 18:07 GMT

ஆரணியில் இருந்து காமராஜர் சிலை பழைய ஆற்றுப்பாலம் வழியாக மாங்கா மரம் பஸ் நிறுத்தம் வழியாக வந்து செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் தற்போது அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து புதிய ஆற்றுப் பாலம் வழியாக நகருக்கு வந்து விடுகின்றன. மாங்கா மரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கக்கூடிய சேவூர், ராட்டினமங்கலம் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே போக்குவரத்துத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து ஆரணியில் இருந்து போகும்போது மாங்கா மரம் பஸ் நிறுத்தும் வழியாக செல்ல வேண்டும், ஆற்காட்டில் இருந்து வருபவர்கள் புதிய ஆற்றுப்பாலம் வழியாக ஆரணிக்கு வர வேண்டும் என திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதிவாணன், ஆரணி. 

மேலும் செய்திகள்