திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் இருபுறமும் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் விசாலமாக இருந்த சாலையின் அளவு சுருங்கிப்போயுள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.