சென்னை போரூர், ராமச்சந்திரா ஆஸ்பத்திரி அருகே உள்ள பஸ் நிறுத்தம், நிழற்குடை இல்லாமல் இருக்கிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.