பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்

Update: 2026-09-06 10:56 GMT

 நாகர்கோவிலில் இருந்து கீழ்குளம் மற்றும் முள்ளூர்துறை வழித்தடத்தில் 7 ‘சி’, 5 ‘எம்’ அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது இந்த பஸ் கீழ்குளம் மற்றும் முள்ளூர்துறை வரை செல்கிறது. ஆனால், அந்த பகுதியில் இருந்து தேங்காப்பட்டணம் துறைமுகம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இப்பகுதியை சேர்ந்த பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகளும் சீரான பஸ்வசதியின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி மேற்குறிப்பிட்ட வழித்தட பஸ்களை தேங்காப்பட்டணம் வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாஹா, தேங்காப்பட்டணம்.

மேலும் செய்திகள்