பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் அவதி

Update: 2026-09-06 17:33 GMT
கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் அரசு டவுன் பஸ்கள் பில்லாலித்தொட்டி பஸ் நிறுத்தத்தில் சில நேரங்களில் நிற்காமல் செல்கின்றன.. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பஸ்கள் நிறுத்தப்பட்டாலும் பயணிகள் முழுமையாக இறங்குவதற்கு முன்பாகவே டிரைவர்கள் பஸ்களை இயக்கி விடுகின்றனர். இதனால் முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் அவசரமாக இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்