கூடுதல் டவுன் பஸ்கள் தேவை

Update: 2026-09-06 15:34 GMT

சீலநாயக்கன்பட்டி பைபாசில் இருந்து அயோத்தியாப்பட்டணம் செல்லும் புறவழிச்சாலையில் சேலம் மண்டல பத்திரப்பதிவு துணைத்தலைவர் அலுவலம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், தாதகாப்பட்டி சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதனால் தினமும் பலர் பல்வேறு தேவைக்காக இங்கு செல்கின்றனர். புறவழிச்சாலை என்பதால் டவுன் பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளது. எனவே பனமரத்துப்பட்டி முதல் அயோத்தியாப்பட்டணம் வரை கூடுதல் டவுன் பஸ் இயக்கினால் மக்களுக்கு பயனாக இருக்கும்.

மேலும் செய்திகள்