சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதி சாலைகளில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் ஓட்டிச்செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும் சில சமயங்களில் நிலைத்தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.