சேந்தமங்கலம்-ராசிபுரம் பிரதான சாலையில் வணிக கடைகள், ஏ.டி.எம். மையம் போன்றவை இயங்கி வருவதால் அதற்காக அங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் அரசு, தனியார், பள்ளி பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் ஊர்ந்து செல்கின்றன. எனவே இந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.