தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் புனித மைக்கேல் உயர்நிலைப்பள்ளி அருகில் வாறுகால் பாலம் உடைந்து துவாரம் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.