நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெளிதாங்கிபுரம் ஊராட்சியைச் சுற்றி காட்டுப்பாக்கம், மேல்களத்தூர், மேலேரி, செல்வமந்தை உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். திருத்தணியில் இருந்து அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் வரை தினமும் வந்து செல்லும் தடம் எண்:டி-83 என்ற அரசு டவுன் பஸ்சை மேற்கண்ட கிராமங்கள் வழியாக வெளிதாங்கிபுரம் வரை நீட்டித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாட்ஷா, அன்வர்திகான்பேட்டை.