திண்டுக்கல் கம்பிளியம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கொளுத்தும் வெயில், மழைக்காலங்களில் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.