கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!

Update: 2026-07-19 16:01 GMT

நங்கவள்ளி அருகே பெரிய சோரகை ஊராட்சியில் உள்ள சீரங்கனூர், தேங்காய் கொட்டாய், குள்ளானூர், பெரிய சோரகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வனவாசியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதுதவிர அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் காலை-மாலை வேளைகளில் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்