ஆற்காடு எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய ஒரு நகரம். அதில் ஆரணியில் இருந்து ஆற்காடு வரும் சாலை பஜார் பகுதி எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படும். இதை குறைக்க பஜார் பகுதியை ஒட்டி உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் முதல் புதிய வேலூர் மெயின் ரோடு வரை கால்வாய் மீது தரமான முறையில் சிமெண்டு சிலாப் அமைத்து இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், ஆற்காடு.