திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், உடன்குடிக்கு செல்லும் மினி பஸ்கள் கரம்பவிளை, தோப்பூருக்கு செல்லாமல் மெயின் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே முன்பு போன்று மினி பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.