செஞ்சி கூட்டுரோட்டில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் பழுதடைந்து பல வருடங்கள் ஆகின்றன. இதனால் கூட்டுரோடு வழியாக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்கள் செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தவிர்க்க பழுதடைந்த போக்குவரத்து சிக்னல் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.