கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் முதல் இடையர்பாளையம் வரை உள்ள சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு முற்றிலும் சேதம் அடைந்து பள்ளங்கள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகின்றன. சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.