வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2025-08-03 18:06 GMT

கோவை ஜி.என்.மில்ஸ் பஸ் நிறுத்தம் அருகில் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கீழே உள்ள சாலையில் விழுகின்றன. இதனால் அந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். வாகனங்கள் மீதோ, வாகன ஓட்டிகள் மீதோ கான்கிரீட் பூச்சுகள் விழும் பட்சத்தில் விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மேம்பாலத்தில் ஏற்பட்டு உள்ள விரிசலை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி