சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் அறிவியல் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான பஸ்கள், சேலம் பழைய பஸ் நிலையம் முதல் கல்லூரி வரை இயக்கப்படவில்லை. எனவே இங்கு பயின்று வரும் மாணவிகள் கல்லூரிக்கு சென்று வர பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேணடும்.
-பழனிவேல், புளியம்பட்டி.