சூளகிரியில் பஸ் நிலையம் கட்டப்பட்ட பிறகு கடந்த 5 ஆண்டுகளாக எந்த ஒரு பஸ்சும் ஊருக்குள் வந்து, பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் சூளகிரி நகரப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், கிருஷ்ணகிரிக்கோ, ஓசூருக்கோ செல்வதற்கு சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சூளகிரி நகர பகுதிக்குள் ஓசூர், கிருஷ்ணகிரி செல்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், சூளகிரி.