பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

Update: 2025-07-20 16:45 GMT

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பஸ்சுக்காக காத்துக் கிடக்கும் மலைவாழ் மக்கள் வெயிலில் உட்கார்ந்து அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில சமயங்களில் மழை பெய்தால் அங்குள்ள கடைகளுக்குள் ஒதுங்க வேண்டிய நிலைமையில் இருந்து வருகின்றனர். எனவே வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக நிற்பதற்கு பஸ் நிலையத்திற்குள் மேற்கூரை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-பிரசாந்த்குமார், செம்மேடு.


மேலும் செய்திகள்