போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-07-13 17:49 GMT

காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையில் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து இடையூறில் சிக்கி தவித்து வருகின்றன. எனவே அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயபால், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்