வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளைப் பிள்ளையார் கோவிலில் பஸ் நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை அந்த பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்லாமல் இருக்கின்றன. மேலும் பஸ் நிலையம் முழுவதும் வணிகர்களின் ஆக்கிரமிப்பில் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், வெள்ளைப் பிள்ளையார் கோவில்.