நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் அடிக்கடி ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு காலை முதல் இரவு வரை சென்று வருகின்றனர். எனவே நாமகிரிப்பேட்டை நகர பகுதியில் இருந்து ராசிபுரத்திற்கு எளிதாக சென்று வர அரசு மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
-ராம், நாமகிரிப்பேட்டை.