பாலக்கோடு அருகே அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிய நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எர்ரணஅள்ளி, ரெட்டியூர், தளவாய்அள்ளி புதூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து கார், லாரி, பஸ், இருசக்கர வாகனங்கள் என தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு 10-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இளங்கோ, கசியம்பட்டி.